சீனாவின் நிரந்தர ஜனாதிபதியாகிறாரா ஜி ஜின்பிங்..?


சீனாவின் அதிபராக தொடர்ந்து நீடிக்க சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கான ஒப்புதலை பெறுவதற்கான செயலில் அதிபர் ஜி ஜின்பிங் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்றம் அதற்கான ஒப்புதலை அளிக்கும்பட்சத்தில் சீனாவின் நிரந்தர அதிபராக ஜி ஜின்பிங் அவதாரம் எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவில் அதிபராக தொடர்ந்து ஒருவர் 2 முறை மட்டுமே இருக்கலாம். அதற்கு மேல் இருக்க முடியாது. ஆனால், அந்த நாட்டின் அதிபராக தொடர்ந்து தானே இருக்கும் வகையில் அந்த நாட்டின் நாடாளுமன்ற சட்டங்களில் மாற்றங்களை ஜி ஜின்பிங் கொண்டு வந்துள்ளார். எப்படி இது சாத்தியமாகும் என்று பார்ப்போம்.

* கடந்த 2013ஆம் ஆண்டில் சீன அதிபராக பொறுப்பேற்ற ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் கூடும் கட்சி பொதுக் கூட்டத்தில் மீண்டும் ஜி அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

* இதற்குத் தகுந்தவாறு இரண்டு முறைதான் ஒருவர் அதிபராக வர முடியும் என்று இருந்த சட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

* திருத்தம் கொண்டு வரப்பட்டாலும், தேசிய மக்கள் காங்கிரஸ் என்ற சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியில் 3,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்கள் போல் அல்ல. உலகிலேயே சீன நாடாளுமன்றத்தில்தான் அதிகளவில் 3,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

* மாகாண மக்கள் சட்டசபையின் மூலம் இந்த உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

* ராணுவமும் இந்த உறுப்பினர்களை தேர்வு செய்கிறது. கடந்த பல ஆண்டுகளாக 4 முதல் 17 சதவீதம் உறுப்பினர்கள் ராணுவத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


* இந்த 3,000 பேரால் தான் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவும், திருத்தங்கள் செய்யவும் முடியும். தற்போது உள்ள 3,000 உறுப்பினர்களில் 2,100 பேர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் தற்போதைய திருத்தம் செய்யப்பட்ட சட்டத்திற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் சட்டம் நிறைவேறிவிடும்.

* இரண்டு முறைக்கு மேல் சீனாவின் அதிபராக ஒருவர் நீடிக்கலாம் என்ற மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தை சீன நாடாளுமன்றம் தடை செய்ய முடியாது.

* மக்கள் குடியரசுக் கட்சி கடந்த 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. முந்தைய தலைவர்களைப் போல இந்தக் கட்சியின் தலைவராக ஜி ஜின்பிங் இல்லை. இதற்கு முன்பு இந்தக் கட்சியின் தலைவர்களாக மாசேதுங், ஹூவா குவாபெங்க், ஹூ யாவ்பாங்க் ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் கட்சியின் தலைவர்களாக இருந்தனர்.

* மேற்கத்திய நாடுகளைப் போல் இல்லை சீனா. இங்கு முடிசூடா மன்னராக ஏற்கனவே ஜி ஜின்பிங்கை மக்கள் கருதி வருகின்றனர். இந்த தருணத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜி ஜின்பிங்கும் நினைக்கிறார். விரைவில் அந்த நாட்டின் நிரந்தர அதிபராக உருவெடுப்பார் எந்த சந்தேகம் இல்லை.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!