ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி…!


இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நடந்து முடிந்தது.

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில், ருஸ்டம் என பெயரிடப்பட்ட ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் ருஸ்டம்-1 ஏற்கனவே தயாரித்து சோதிக்கப்பட்ட நிலையில், ருஸ்டம்-2 விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதன் சோதனை ஓட்டம் நேற்று கர்நாடகத்தின் சித்ரதுர்கா மாவட்டத்துக்கு உட்பட்ட சலக்கேரில் நடந்தது. இந்த சோதனை வெற்றி கரமாக நடந்து முடிந்தது.


இந்த நிகழ்வை மத்திய பாதுகாப்புத்துறை செயலாளரும், டி.ஆர்.ஓ.டி. தலைவருமான கிறிஸ்டோபர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

நடுத்தர உயரத்தில், நீண்ட நேரம் பறக்கும் திறன் வாய்ந்த இந்த ருஸ்டம்-2 விமானம் அமெரிக்காவின் பிரிடேட்டர் ஆளில்லா விமானத்துக்கு சமமான தரம் வாய்ந்தது.

இந்த விமானம் எதிரிகளின் இடங்களை கண்காணிப்பதுடன், ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறனும் மிக்கதாகும்.

இது தொடர்ந்து 24 மணி நேரம் வரை ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு மிகுந்த உந்துதலாக அமைந்துள்ளன. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!