முதல்முறையாக இந்திய வீராங்கனை ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில் பதக்கம் வென்று சாதனை…!


ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பையில் குதிரை தாவுதல் (வால்ட்) பிரிவில் இந்திய வீராங்கனை அருணா ரெட்டி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 2018-ம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது.


இதில் இன்று நடைபெற்ற குதிரை தாவுதல் (வால்ட்) பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அருணா ரெட்டி (22) வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதுவே ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். அவர் 13.649 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடம் பிடித்தார்.

ஸ்லொவகியாவின் ஜாசா கைஸ்லெப் 13.800 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் எமிலி ஒயிட்ஹெட் 13.699 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!