மீன் குழம்புக்காக இப்படியுமா..? குழந்தையை தரையில் அடித்து கொன்ற இளைஞர்!


இந்தியாவில் மீன் குழம்புக்காக ஏற்பட்ட சண்டையில் உறவினரின் 3 வயது குழந்தையை இளைஞர் ஒருவர் தூக்கி தரையில் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹராஷ்ட்ரா மாநிலம் மும்பை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவர் ஷெரிப் சாஹா, மனைவி மற்றும் தன் 3 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

அவர்களது வீட்டில் ஷெரிப்பின் உறவினர் நவாஸ் சாஹாவும்(வயது 19) தங்கியிருந்துள்ளார்.

அதற்கான தொகையை மாதாமாதம் நவாஸ் கொடுத்து வந்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி நவாஸ் கேட்டுள்ளார்.

அதற்கு ஷெரிப்பின் மனைவி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது கைகலப்பாக மாறவே ஆத்திரத்தில் நவாஸ், ஷெரிப்பின் மூன்று வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்துள்ளார்.

இதில் குறித்த குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் நவாஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!