70 வயது மூதாட்டிக்கு மருத்துவமனையில் ஊழியர்களால் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்…!


நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவியாளர் யாரும் இல்லாததால் மூதாட்டியை ஊழியர்கள் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மரியபுஷ்பம் (வயது70). ஆதரவற்ற இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாலை ஓரம் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 127-வது பெண்கள் வார்டில் மரியபுஷ்பத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் திடீரென்று மரியபுஷ்பத்தை அவதூறாக பேசினர். உதவியாளர் இல்லாமல் ஏன் வந்தாய் என கேட்டு அவர்கள் மரிய புஷ்பத்தை வெளியேற்றினர்.

அதற்கு மரியபுஷ்பம் வெளியேற மறுத்து வாசல் படியில் அமர்ந்தார். அதற்கு ஊழியர்கள் மனநலம் பாதித்த இந்த பெண்ணை ஏன் இங்கு சேர்த்தீர்கள் என்று சக ஊழியர்களிடம் கடிந்து கொண்டனர்.

அதற்கு அந்த பெண் அழுதபடி நான் எங்கு செல்வேன்? என்னை கவனிக்க ஆள் இல்லையே என கண்ணீர் விட்டு அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், அந்த பெண்ணிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நர்சுகள் நடந்துகொண்ட விதம் மோசமாக உள்ளது.

ஆதரவற்ற பெண்களிடம் இப்படி கருணையே இல்லாமல் நடப்பதுதான் மனித நேயமா? அந்த பெண் மனநலம் பாதித்தவர் என்றால் அதற்கான பிரிவில் சேர்த்திருக்கலாமே? இதுபற்றி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனை டீன் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!