பொடுகுத் தொல்லையால் தலை அரிக்கின்றதா..? வெங்காயச் சாற்றை எப்படி பயன்படுத்துவது..?


பொடுகுத் தொல்லை ஏற்பட்டால், தலைமுடி உதிர்வது மட்டுமல்லாது முகத்தில் பருக்களும் தோன்றும். அதுமட்டுமின்றி எத்தனை அழகான ஆடைகள் அணிந்தாலும் பொடுகு கொட்டுவதால் சில சமயங்களில் அவமானத்தைச் சந்திக்கவும் நேர்கிறது.

இந்த பொடுகுத் தொல்லையை சீர்செய்யவென சிலர் எல்லா விதமான பொருட்களையும் பயன்படுத்திப் பார்ப்பதுண்டு. எனினும், வெங்காயச் சாற்றை தலையில் பூசுவதன் மூலம் இதற்கு சிறந்த தீர்வைக் காண முடியும்.


இந்த வெங்காயச் சாற்றை எவ்வாறு பயன்படுத்துவது எனப் பார்ப்போம்.

01. வெங்காயச் சாறு மற்றும் பாசிப்பயறு கலவை
சின்ன வெங்காயச் சாற்றுடன் பாசிப்பயறு மாவை கலந்து அதனை தலையில் பூசவும். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து தலையை நன்கு கழுவவும்.

02. பீட்ரூட் மற்றும் வெங்காயச் சாற்றுக் கலவை
வெங்காயச் சாற்றுடன் பீட்ரூட் சாற்றைக் கலந்து தடவி 20 நிமிடம் வைத்து பின்னர் நன்றாக தலையைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்கும்.


03. கற்றாழைச் சாறு மற்றும் வெங்காயச் சாற்றுக் கலவை
கற்றாழையில் உள்ள சதைப் பகுதியை எடுத்து அதனை வெங்காயச் சாற்றுடன் கலந்து பூசி 30 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை நன்றாக கழுவவும்.

04. வெந்தயம் மற்றும் வெங்காயச் சாறு
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து அதனை தண்ணீரில் ஊற விடவும். பின்னர் மறுநாள் அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைக் கோப்பை வெங்காயச் சாற்றுடன் அரைத்து வைத்த வெந்தயத்தை கலந்து அதனை தலையில் பூசவும். 30 நிமிடங்கள் கழிந்த பின்னர் தலையைக் கழுவவும்.

05. புடலங்காய் மற்றும் வெங்காயச் சாறு
புடலங்காய் மற்றும் வெங்காயம் என்பவற்றை சம அளவில் அரைத்து அவற்றின் சாற்றை எடுத்து தலையில் பூசவும். 30 நிமிடங்கள் கழித்து தலையை கழுவி விடவும்.
மேற்குறிப்பிட்ட முறைகளை செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட முடியும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!