யாருமே செய்ய முடியாத தியாகம்… கேரள கல்லூரி மாணவியொருவர் செய்துள்ளார் பார்த்தீங்களா?


கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நோயாளிகளுக்காக தனது கூந்தலை தியாகம் செய்து மொட்டையடித்துள்ளார்.

பெண்களுக்கு கூந்தல் தான் அலங்காரம். அதிலும் கல்லூரி செல்லும் மாணவிகள் விதவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொள்வது வழக்கம்.

கூந்தல் வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் வித விதமான எண்ணைகளை வாங்குவது உண்டு. அப்படிப்பட்ட கூந்தலை தியாகம் செய்ய யாரும் முன் வருவதில்லை.

ஆனால் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அபர்ணா என்பவர், தனது கூந்தலை தியாகம் செய்து மொட்டையடித்துள்ளார். இதுபற்றி அவரது தோழிகள் அபர்ணாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

சில நோய்கள் பாதித்த மனிதர்களுக்கு முடி முழுமையாக கொட்டி விடும். அவர்களுக்கு செயற்கை கூந்தல் வைக்க இப்போது முடி தானம் வழங்கினேன். இதற்காகவே மொட்டை அடித்துக் கொண்டேன் என்றார்.

அபர்ணா, ரத்ததானம் வழங்குவதிலும் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி ரத்த தானமும் வழங்கி வருவதாக அவரது தோழிகள் தெரிவித்தனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!