புருவங்களை அழகாக்க வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை வழிமுறைகள்..!


பெண்களுக்கு கண்கள் அழகாக இருத்தல் அவசியம். கண்கள் மாத்திரம் அல்ல, புருவங்களும் அழகாக இருத்தல் வேண்டும். கண்களுக்கு கவசமாக விளங்குபவை புருவங்கள்.

சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும், வேறு சிலருக்கு திடீரென புருவ முடி உதிர ஆரம்பிக்கும். தொற்றுநோய், தொழுநோய் போன்ற தோல் வியாதி, பிறவியிலேயே வரும் மரபுவழி குறைபாடு, தைராக்ஸின் சுரப்பி குறைபாடு, கீமோதெரபி எனப்படும் புற்றுநோய் சிகிச்சை ஆகியன இதற்கு காரணமாக அமையலாம்.

அது சரி, கண்களுக்கு அழகு சேர்க்கும் இந்த புருவங்களை அழகாக்க நம் வீட்டிலேயே பின்பற்றக்கூடிய இயற்கை வழிமுறைகள் பல உள்ளன. அவை என்னவென்பதை நாம் இப்போது பார்ப்போம்.


01. வெங்காய சாறு
வெங்காய சாற்றை எடுத்து, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, மூன்று தேக்கரண்டி தண்ணீர் கலந்து புருவத்தில் தேய்த்து வந்தால், புருவங்கள் நன்கு வளரும். வாரம் மூன்று முறை இதை செய்யலாம். இதிலிருக்கும் சல்பர், முடி உதிர்வதை தடுக்கும்.


02. விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு புருவங்களில் தேய்த்து 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால், புருவம் புதுப்பொலிவு பெறும்.

02. தேங்காய் எண்ணெய்
உறங்குவதற்கு முன்னர் புருவத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, காலையில் கழுவிவிடவும். இது முடியின் புரோட்டீன் இழப்பை தடுக்கும். இதிலிருக்கும் லாரிக் அமிலம், புருவ முடி வேர்களை நுண்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும்.


03. ஒலிவ் எண்ணெய்
விரலால் ஒலிவ் எண்ணெயை புருவங்களில் தடவி, மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து கழுவவும். இரண்டு வாரங்களுக்கு இதை செய்து வந்தால் புருவங்கள் வளரும். ஒலிவ் எண்ணெயில் இருக்கும் விட்டமின் ”இ” புருவத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கும்.

04. பாதாம் எண்ணெய்
உறங்குவதற்கு முன்னர் பாதாம் எண்ணெயை புருவத்தில் தேய்த்துவிட்டு காலையில் கழுவவும். இதிலிருக்கும் விட்டமின் ஏ, பி, இ ஆகியன புருவங்களின் வளர்ச்சிக்கு உதவும்.


05. பால்
பாலை பஞ்சால் தொட்டு புருவத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். ஆறு மாதங்களுக்கு இதை தொடர்ந்து செய்து வர, புருவங்கள் சீராக வளரும்.

07. முட்டை மஞ்சள் கரு
இதை, புருவங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்யலாம்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!