வீட்டை அலங்கரிக்க பழைய புடவையை இப்படி கூட பயன்படுத்தலாம்…!


பெண்களுக்கு எப்போதுமே ஆடைகளின் மீதும் நகைகளின் மீதும் நாட்டம் அதிகமுண்டு. அப்படி வாங்கிக் குவித்த புடவைகளில் பல பயன்படுத்தாமலே பீரோக்களில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் என்ன தான் செய்வது? இதோ அதற்கும் சில டெக்னிக்குகள் உண்டு. பழைய புடவைகளைப் பயன்படுத்தி உங்களைப் போலவே உங்கள் வீட்டையும் அழகாக மாற்றிக் கொள்ள் முடியும்.

மொடமொடப்பாக இருக்கும் காட்டன் புடவைகளைக் குளிர்காலத்தில் படுக்கையின் மீது விரிப்பாக விரித்துக் கொள்ளலாம். அவை குளிருக்கு நல்ல வெதுவெதுப்பாக இருக்கும்.

கான்ட்ராஸ்ட் கலர் புடவைகள் இருந்தால் அவற்றில் உள்ள கான்ட்ராஸ்ட் நிறங்கள் உள்ள பகுதியை தனியே வெட்டி எடுத்து, தலையணை உறைகளாகத் தைத்துக் கொள்ள முடியும். சிறிய குஷன் தலையணைக்கு அவை மிகவும் அழகாக இருக்கும்.


பூக்கள் மற்றும் அழகிய பிரிண்டட் புடவைகளை அழிகாக வெட்டி எடுத்து கார்டு போர்ட்டில் வைத்துத் தைத்து வீட்டின் சுவர்களில் வால் ஆர்ட்டுகளாக மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

மென்மையான காட்டன் மற்றும் மென்மையான சில்க் புடவைகளை ஜன்னல் கர்ட்டன்களாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதுபோன்று இன்னும் ஏராளமான முறைகளில் உங்கள் பழைய புடவைகளைக் குப்பையில் போடாமல், உபயோகமானதாகப் பயன்படுத்தி உங்கள் வீட்டை அழகாக்கிக் கொள்ளலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!