கலாம் படித்த பள்ளியை வெளியே நின்று பார்வையிட்ட கமல்… எதெற்காகத் தெரியுமா?


அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உள்ளே செல்ல அனுமதி இல்லாததால், வெளியே நின்று கமல்ஹாசன் பார்வையிட்டார்.

தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் பெயர் கொள்கைகளை அறிவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார்.

அப்துல் கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து நலம் விசாரித்த கமல், அவருக்கு பொன்னாடை போர்த்தினார். மேலும், நினைவுப்பரிசு ஒன்றையும் கமல்ஹாசன் வழங்கினார்.

இதனை அடுத்து, கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு வெளியே நின்று பார்வையிட்ட அவர் பள்ளியை வணங்கினார். இதனை அடுத்து, மீனவர்களை கமல்ஹாசன் சந்திக்க உள்ளார்.

பள்ளியின் உள்ளே செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் புகாரளித்ததால், மாவட்ட கல்வி அதிகாரி கமல்ஹாசன் பள்ளிக்கு செல்ல அனுமதி மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!