முகத்தில் அதிகமாக பருக்கள் வர என்ன காரணம்..? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..?


இக்காலத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பலர் முகப்பருக்களால் அவதியுறுவது என்னமோ மறுக்க முடியாத உண்மை. வளி மாசடைதல், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

முகத்தை சரியாக பராமரிக்காவிட்டாலும் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் முகத்தை மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் கெடுப்பவையாக அமையும்.

சருமத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதால் அவை சருமத்தில் உள்ள துளைகளுக்குள் அடைந்து வெளியே வர முடியாமல் பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.


இவை தவிர்ந்த வேறு சில காரணங்களும் உள்ளன.

01. தலையில் பொடுகு இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும். அதனால் முகத்தில் பருக்கள் தோன்றுகிறது.
02. அதிகமான உணவு சாப்பிட்டாலோ, அல்லது எடுத்துக் கொண்ட உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் ஏற்படும்.
03. ஷhம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், ஹேர் ஸ்ப்ரே என்பனவற்றால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் பருக்கள் உண்டாகும்.


இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும்?

01. அதிகளவு தண்ணீர் குடித்திடுங்கள்.
02. காய்கறி மற்றும் பழங்களை அதிகளவில் உட்கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளை தவிர்த்திடுங்கள்.
03. தினமும் உடற்பயிற்சி செய்திடுங்கள், மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!