எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினர் இத படித்தால் திராட்சைக்கு இனி நோ சொல்ல மாட்டீர்கள்!


உடல் நலத்திற்கு மட்டுமல்ல முக அழகிற்கும் திராட்சை உதவி புரிகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?

திராட்சை பழத்தில் அடங்கியிருக்கும் விட்டமின்கள், மினரல்கள் மற்றும் அன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உடல்நலத்திற்கு மட்டுமல்ல முக அழகுக்கும் முக்கிய பங்காற்றுகின்றது. சரும அழகை அதிகரிக்க சிகப்பு, பச்சை, கருப்பு என எல்லாவகை திராட்சைகளையும் இதற்கு பயன்படுத்தலாம். திராட்சையில் நிறைந்துள்ள அதிகப்படியான அன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை சுத்தம் செய்து அதிலிருக்கும் அழுக்களை நீக்கி விடும்.

அது சரி, முகத்தை அழகாக்குவதற்கு இந்த திராட்சையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.


01. நான்கைந்து திராட்சை பழத்தை கைகளில் எடுத்து நசுக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதன் சாற்றை அப்படியே முகத்தில் பூசுங்கள். 10 நிமிடங்கள் காய்ந்ததும் அதனை கழுவி விடவும்.

02. இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இந்த பேஸ் பேக் நம் சருமம் சுருக்கமடைவதை தடுக்கும். இதற்கு திராட்சையில் உள்ள அதிகப்படியான விட்டமின் சியே உதவி புரிகின்றது.


03. கருப்பு திராட்சையை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டுடன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இப்படிச் செய்தால் உங்கள் முகம் பொலிவாக இருக்கும். எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு இது மிகவும் நல்லது.

04. இதே போல் வறண்ட சருமம் இருப்பவர்கள் திராட்சை விழுது மற்றும் அவகாடோ விழுது என்பவற்றை அரைத்து, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடுங்கள். நன்றாக காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவி விடுங்கள். இதனை தொடர்ந்து செய்வதால் உங்களுக்கு மிருதுவான சருமம் கிடைத்திடும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!