காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு – கர்நாடகாவில் ரஜினி கொடும்பாவி எரிப்பு..!


காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த நீரின் அளவை விட குறைவாக வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

அரசியலில் ஈடுபடத் தொடங்கி உள்ள நடிகர் ரஜினி காந்த், இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றார். தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினிகாந்த், காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதால் அவருக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

காவிரி தீர்ப்பு குறித்து தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, ரஜினியின் உருவ பொம்மை எதிர்த்தனர். சன்னப்பட்னா நகரில் கன்னட அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இது நடுவர் மன்றம் வழங்கிய அளவை விட 14.75 டிஎம்சி குவைவு ஆகும். அதேசமயம், கர்நாடக மாநிலத்திற்கு பாசனம் மற்றும் பெங்களூரு குடிநீர் தேவையை காரணம் காட்டி, 14.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!