செல்போனுக்காக இப்படியுமா..? தற்கொலை செய்ய வீட்டிலிருந்து சென்ற சிறுமி..!


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு உட்பட்ட அவாத்பூரி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்தும் அந்த சிறுமி தொடர்ந்து போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய், சிறுமியின் செல்போனை பிடுங்கி அதிலிருந்த சிம்கார்டை எடுத்து உடைத்து போட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து தற்கொலை கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அந்த கடிதத்தில் ”எனக்கு வாழ பிடிக்கவில்லை. இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். தங்கச்சியை ஐ.பி.எஸ். படிக்க வையுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். பின் போபாலில் இருந்து எதோ ரெயில் பிடித்து 1400 கி.மீ. வரை சென்றுள்ளார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் கடந்த 24 மணி நேரமாக அந்த சிறுமியை தேடி இருக்கிறார்கள். ஆனால் அந்த சிறுமி குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அந்த சிறுமி போன் செய்துள்ளார்.

ரெயிலில் ஒருவரிடம் போன் வாங்கி அந்த சிறுமி பயமாக இருக்கிறது என்று புலம்பி உள்ளார். அப்போதுதான் அவள் 1,400 கிமீ தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியிலும், அந்த சிறுமியின் பள்ளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-
Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!