சினிமாவில் கதாநாயகனான டாக்டர்!

டாக்டருக்கு படித்து மருத்துவத் தொழில் செய்து வந்த ஆதித் சுந்தரேஸ்வரர், கதாநாயகனாகி உள்ளார்.

கல்லூரியில் படித்தபோது, தூரிகையே ஓவியமானதே' என்ற குறும்படத்தில் நடித்தார்.

பின்னர் நடிப்பு பயிற்சியை முடித்துஆ ஆவன்னா’ என்ற குறும்படத்தில் நடித்து சைமா விருது பெற்றார்.

மிஸ்கின் உதவி இயக்குனர் மீனா குமாரி டைரக்டு செய்த பாஸ் பேபி' வெப் தொடரில் கதை நாயகனாக வந்தார்.லெஜன்ட்’ திரைப்படத்தில் சிறிய வேடம் ஏற்றார்.

யாதுமாகி நின்றாய்' குறும்படத்தில் நாயகனாக நடித்து விருது பெற்றார். படிப்படியாக முன்னேறிநேற்று நீ இன்று நான்’ திரைப்படத்தில் கதாநாயகன் ஆனார். `ஆயிரம்கால் மண்டபம்’ படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.

தற்போது சேரன் இயக்கி உள்ள வெப் தொடரில் ஆரி, கலையரசனுடன் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!