புளிப்பு வாசனையாக வெளிவருதா..? பால்வினை நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்..!


பெண்கள் மத்தியில் வெள்ளைப்படுதல் இயற்கை. உடல் சூடு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு வெள்ளைபடுதல் அதிகமாக இருக்கும் என கூறப்படுவதும் உண்டு. ஆனால், வெள்ளைப்படுதலின் போது சிலருக்கு வாசனை / நாற்றம் வேறுபட்டு தென்படலாம். முக்கியமாக புளித்த வாசனை தென்படுவது சில உடல்நல பாதிப்பு, நோய் தொற்று, பால்வினை நோயின் ஆரம்பக் காலகட்ட அறிகுறியாக கருதப்படுகிறது.

எனவே, ஒருவேளை உங்களிடம் தென்பட்டாலோ அல்லது, உங்கள் தோழி, தெரிந்தவர்கள் யாராவது இதுப் போன்ற மாற்றம் ஏற்படுவது பற்றி கூறினால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. அதற்கு முன் இது எதன் அறிகுறியாக வெளிப்படுகிறது என தெரிந்துக் கொள்ளுங்கள்…

சிலர் மத்தியில் இது இயற்கையானதாக இருக்க கூடும். வெள்ளைப்படுதலில் வாசனை மாற்றம் அடைவதை வைத்து சில பெண்கள் மாதவிடாய் ஆரம்பமாவதை அறிந்துக் கொள்ள முடியும். புளிப்பு வாசனை வெளிப்படுவது சாதாரணமானது தான். ஒருவேளை எரிச்சல், வலி, சிவந்து காணப்படுதல் இருந்தால் நீங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பாக்டீரியல் வஜினோஸிஸ் என்பது ஒரு பெண்ணுறுப்பு தொற்று ஆகும். இது பலதரப்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் தென்படுகிறது. வெஜினாவில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது, இந்த தொற்று உண்டாக வாய்ப்புகள் உள்ளன. பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிக்கும் போது வெள்ளைப்படுதலில் புளித்த வாசனை வரலாம்.


*சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்*உடலுறவில் ஈடுபட்ட பிறகு வழக்கத்திற்கு மாறான வெள்ளைப்படுதல் ஏற்படுவது.*எரிச்சல் *பெண்ணுறுப்பு சுற்றி அரிப்பு ஏற்படுவது*வெள்ளைப்படுதலில் புளித்த வாசனை வாடுவது

*புதியதாக ஓர் நபருடன் உடலுறவில் ஈடுபடும் போது*பலருடன் உடலுறவில் ஈடுபடும் போது*ஆணுறை பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபடும் போது*கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபடும் போது

ட்ரைக்கொமோனஸ் தொற்று என்பது ஓர் பால்வினை நோய் தொற்றாகும். இது சிறிய வகை பாக்டீரியாக்களால் உண்டாகிறது. இது இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக ஏற்படுகிறது.

*சிறுநீர் கழிக்கும் போது வலி*பெண்ணுறுப்பில் எரிச்சல்*பெண்ணுறுப்பில் அரிப்பு*மஞ்சள் நிற வெள்ளைப்படுதல்*அடிவயிற்றில் வலி*உடலுறவில் ஈடுபடும் போது அசௌகரியம்

இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து 5-28 நாட்களுக்குள் சிகிச்சை ஆரம்பிக்காமல் இருந்தால், இது எச்.ஐ.வி வரையிலான அபாயம் உண்டாக வழிவகுத்துவிடும்.


ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் கூட, வெள்ளைப்படுதலில் புளித்த வாசனை வர வாய்ப்புகள் உள்ளன. ஈஸ்ட் தொற்று மிக வேகமாக பரவக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அழற்சி கருப்பை, சினைப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் வழியாக தொற்று ஏற்படுத்துகிறது. முதல் கட்டத்திலேயே இதற்கு தீர்வு காணாமல் போனால், இது மேக வெட்டை மற்றும் கிளமீடியா நோய் தாக்கம் உண்டாக காரணியாகிவிடும்.

*மாதவிடாய் மாற்றம்*காய்ச்சல்*அடிவாயிற்று வலி*இடுப்பு வலி*மாதவிடாய் இல்லாதபோது இரத்தப் போக்கு*உடலுறவின் போது வலி*சிறுநீர் கழிக்கும் போது வலி*நடக்கும் போது வலி

இதை ஆரம்பத்திலேயே சரி செய்யாமல் விடுவது இனப்பெருக்க மண்டல உறுப்புகளை பாதித்துவிடும். இதனால், குழந்தை பெறுவதில் கூட பாதிப்புகள் உண்டாகலாம்.

மேலும், பால்வினை நோய் தாக்கங்கள் எற்பட்டிருந்தாலும் கூட வெள்ளைப்படுதலின் போது புளித்த வாசனை வரலாம்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!