69 வயதில் 3-வது திருமணம் செய்த பிரபல மல்யுத்த வீரர்!

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். 69 வயதான இவர் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

கடந்த 1983-ம் ஆண்டு லிண்டா என்பவரை திருமணம் செய்த இவர் 2009-ம் ஆண்டு அவரை பிரிந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு ஜெனிபர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.

இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில் அவரையும் பிரிந்தார்.

இந்நிலையில் ஹல்க் ஹோகன் 45 வயதான யோகா பயிற்சியாளரான ஸ்கைடெய்லி என்பவரை 3-வதாக திருமணம் செய்துள்ளார்.

அவர்கள் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதைப்பார்த்த ஹல்க் ஹோகனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!