சீன பெண்ணும், காதலனை தேடி பாகிஸ்தானுக்கு ஓட்டம்!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் அஞ்சு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையே அஞ்சு, தன் குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் நஸ்ருல்லாவை பார்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு சென்றார்.

அங்கு அவரை அஞ்சு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை அஞ்சு மறுத்தார். இந்த நிலையில் இந்திய பெண்ணை போல, சீனாவை சேர்ந்த ஒருவர் தனது பாகிஸ்தான் காதலனை பார்க்க அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

சீனாவை சேர்ந்த 21 வயதான பெண் காவ்பெங். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தானின் பஜாவூர் பகுதியை சேர்ந்த ஜாவேத்துடன் (வயது 18) பழக்கம் ஏற்பட்டது.

ஸ்னாப் சாட் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்பில் இருந்த அவர்கள் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக சீன பெண் காவ்பெங், பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார். அவர் 3 மாத விசாவில் சீனாவில் இருந்து தில்கிட் வழியாக சாலை மார்க்கமாக இஸ்லாமாபாத் வந்தடைந்தார்.

அவரை காதலன் ஜாவேத் அழைத்து சென்றார். பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக சீன காதலியை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்லாமல் லோயர் டிர் மாவட்டம் சமர்பாக் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஜாவேத் அழைத்து சென்று தங்க வைத்தார்.

பின்னர் காவ்பெங், மதம் மாறி ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கிஸ்வா என்று பெயரை மாற்றினார். சீனப் பெண் சமர்பாந்தில் தங்கியிருந்தபோது அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஜாவேத் உறவினர்கள் கூறும்போது, ஜாவேத், கல்லூரியில் படித்து வருகிறார். அவரது காதலியை கோர்ட்டில் வைத்து திருமணம் செய்து பதிவு செய்ய உள்ளார். அதன்பின் சில நாட்களில் காவ்பெங் சீனாவுக்கு திரும்பி செல்கிறார். ஜாவேத் இங்கேயே இருப்பார் என்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!