ஒரு எருமை மாடு… சொந்தம் கொண்டாடிய 2 பேர் – பாசத்தை வைத்து தீர்ப்பு வழங்கிய போலீசார்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. இவர் வளர்த்து வந்த எருமை மாடு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது.

இந்த மாட்டை, பழஞ்ச நல்லூரை சேர்ந்த பழனிவேல் பிடித்து வைத்திருப்பதாக தீபா காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். ஆனால், பழனிவேலோ, தனது உறவினரிடம் அந்த எருமை மாட்டை வாங்கி பல மாதங்களாக வளர்த்து வருவதாக கூறினார்.

இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. அந்த எருமை மாட்டின் உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது.

உடனே போலீசார், அந்த எருமை மாடு யாருக்கு சொந்தம்? என்பதை நிரூபிக்க, கட்டி வைக்கப்பட்ட மாட்டை அவிழ்த்து விட்டு யாருடன் மாடு செல்கிறதோ அவர்களுக்குதான் மாடு சொந்தம் என பிரச்சினையை முடித்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி அந்த எருமை மாட்டை அவிழ்த்து விட்டனர். முதலில் அந்த மாடு இருவரிடமும் பாசம் காட்டியது. இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் அந்த எருமை மாட்டை பழனிவேல் சைகை செய்து அழைத்தார். உடனே அவருடன் அந்த எருமை மாடு சென்றது. இதையறிந்த தீபா விரக்தி அடைந்து வீடு திரும்பினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!