லாரியில் சிக்கி பலியானாவரின் உடலை ஏற்றிச் சென்ற வாகனத்தைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில்…!


ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் அருகே நேற்று நடந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமாமணி (57) என்பவர் மீது தனியாருக்கு சொந்தமான தண்ணீர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமாமணியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக நகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் எடுத்துச் சென்றது அப்பகுதியில் கூடியிருந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியது.


புண்ணியஸ்தலம், பாரம்பர்ய நகரம், யாத்திரை தலம், அம்ரூத் சிட்டி என விதவிதமாகப் பெயர் வைத்து ஒவ்வொரு பெயரிலும் ஆண்டுக்கு ஆண்டு பல நூறு கோடி ரூபாய் அரசு ஒதுக்கி வரும் நிலையில், விபத்தில் உயிரிழக்கும் உடலை எடுத்துச் செல்வதற்குகூட ஒரு வாகனம் இல்லாத நிலையில் ராமேசுவரம் நகராட்சி இயங்கி வருகிறது.

அரசு நிர்வாகம் தான் இப்படி இருக்கிறது என்றால் பக்தர்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இயங்கி வரும் வெளிமாநில டிரஸ்டுகளும் பக்தர்களின் நலனுக்காகத் துளிகூட நன்மை செய்ய முன் வராத நிலையில் வணிக நிறுவனங்களைப்போல் இயங்கி வருகின்றன.

இனி வரும் காலங்களிலாவது மனித உயிரின் மாண்பை அறியாமல் குப்பை வாகனத்தில் எடுத்துச் செல்லும் அவலமான போக்கைக் கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!