4 குழந்தைகளுடன் பப்ஜி ஆன்லைன் காதலனை தேடி வந்த பாகிஸ்தான் பெண்!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா பகுதியை இளைஞன் சச்சின். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்துவருகிறார்.

இதனிடையே, சச்சின் தனது செல்போனில் 2019-ம் ஆண்டு முத்ல ஆன்லைன் பப்ஜி விளையாட்டு விளையாடியுள்ளார்.

அப்போது, சச்சினுக்கு பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீமா ஹைதருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன.

பப்ஜி விளையாட்டின் போது சச்சினுக்கும், சீமாவும் அடிக்கடி பேசியுள்ளனர். அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் தனது காதலனான சச்சினை பார்க்க வேண்டும் என எண்ணிய சீமா தனது கணவரை கைவிட்டு 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுள்ளார்.

சீமா 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்றுள்ளார். அங்கு சச்சினும் சீமாவும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் நேபாளத்தில் இருந்து கடந்த மாதம் சச்சின் சீமாவை அவரது 4 குழந்தைகளுடன் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். சீமாவும் அவரது 4 குழந்தைகளும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

பின்னர், சச்சினும் சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர். இதனிடையே, ரபுபுரா பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் பெண் தங்கி இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் உ.பி.போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சீமா ஹைதர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் அவர் தனது 4 குழந்தைகளுடன் பப்ஜி ஆன்லைன் காதலன் சச்சினுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சீமா அவரது 4 குழந்தைகள், சச்சின், சச்சினின் தந்தை உள்பட 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சச்சின், சீமா உள்பட 7 பேருக்கும் கோர்ட்டு நேற்று ஜாமின் வழங்கியுள்ளது.

தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் தங்களை பிரித்துவிட வேண்டாம் எனவும் தான் இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டுமென சீமா கோரிக்கை விடுத்துள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!