பெண்ணை கடித்து கொன்று உடலை பாதுகாத்து வந்த முதலை – அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவில் வசித்து வந்த பெண் (69), கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்லப்பிராணியுடன் ஒரு கோல்ப் மைதானத்தின் எல்லையில் உள்ள குளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த முதலை ஒன்று பெண்ணை கடித்து கொன்று இழுத்து சென்றது. இதுதொடர்பாக கிடைத்த புகாரை அடுத்து போலீசார் பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்த குளத்தின் அருகே பெண்ணின் சடலம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

முதலை பெண்ணின் உடலைப் பாதுகாத்து மீட்க வருபவர்களைத் திருப்பியனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில்,”மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு முதலை தோன்றி, அவசரகால முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்து பெண்ணைக் காத்துக்கொண்டிருந்தது” என்று தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்குள் இது இரண்டாவது அபாயகரமான முதலை தாக்குதல் என்று கூறப்படுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!