டயர்கள் இல்லாத, மிகச்சிறிய கார்… படுத்துக்கொண்டே ஓட்டும் டிரைவர்!

தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் கார் தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பயனர்களை வியப்படைய செய்துள்ளது.


அந்த காரில் டயர்கள் கிடையாது. தரையில் பாம்பு போல ஊர்ந்து செல்லும் இந்த கார் உலகின் மிகச்சிறிய கார் என சமூக வலைத்தள பயனர்களால் அழைக்கப்டுகிறது.

இந்த காரை உருவாக்கும் முழு செயல்முறையும் யூடியூப் சேனலான Carmagheddon-ல் காட்டப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ளே டிரைவர் படுத்துக்கொண்டு இயக்குவது வீடியோவில் தெரிகிறது. காரின் மேல் பகுதி மட்டும் வெளியே தெரியும்.

ஆனால் கண்ணாடியின் கீழ் பகுதி, என்ஜின் இருக்கும் முன் பகுதி மற்றும் பொருட்கள் வைக்கப்படும் பின் பகுதி என அனைத்தும் காணவில்லை.

மேலும் டயர் கூட இல்லாமல் இயங்கும் இந்த காரை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த கார் எப்படி இயங்குகிறது என்பது குறித்தும் வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை வடிமைத்த வாலிபர்களுக்கு சமூக வலைத்தள பயனர்கள் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!