புதிய காரை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பரிசாக வழங்கிய கமல்!

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார்.

பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதற்கிடையே, தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது.

கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்பின்னர் தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேறு வேலை, தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் புதிய காரை பரிசாக வழங்கினார்.

அதன்பின்னர் பேசிய கமல், ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை.

வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை மீண்டும் தொடரவிருக்கிறார் என்றார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!