காசு வாங்கிட்டு ஓட்டுப்போடாதீர்கள் என சொல்லுங்கள்…. விஜய் பேச்சு

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம்.

நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்டராகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.

அசுரன் பட வசனத்தை கூறி மாணவர்களை உற்சாகப்படுத்திய விஜய்… இந்த விழா நடத்துவதற்கான காரணம் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் உன்னிடம் இருந்து சொத்து, நிலத்தை எடுத்துக்கொள்ளலாம். கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப்பவர்கள் நீங்கள் தான்.

காசு வாங்கிட்டு ஓட்டுப்போடாதீர்கள் ஒருவர் ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவு செய்கிறார் என்றால் அவர் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

காசு வாங்கிட்டு ஓட்டுப் போட வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கூறுங்கள் என்று சொன்னார் விஜய்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!