நடுவானில் விமானத்தில் மோதிய பறவை… விமானிக்கு நடந்தது என்ன..?

ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது.

பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார்.

அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

விமானம் தரை இறங்கியதும், விமானி ரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விமானி அதிர்ஷ்டசாலி என்றும், அதனால் தான் அவர் உயிருடன் மீண்டார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

தற்போது விமானத்தின் காக்பிட் பகுதியில் பறவை மோதி நிற்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!