தனுஷின் 50-வது படத்தில் இணையும் அபர்ணா பாலமுரளி!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தில் 8 தோட்டாக்கள், சூரரைப் போற்று படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!