பிரபல ஹீரோவாக இருந்த நடிகர் ஒரு எளிய பைக் மெக்கானிக்காக மாறினார்…!

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறியப்பட்டவர் நடிகர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான ‘காதல் தேசம்’, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மிர்சா அப்பாஸ் அலி என்ற முழுப்பெயர் கொண்ட அப்பாஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் இந்திய நடிகரும் மாடலும் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்திலும் நடித்து உள்ளார்.


1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் மூலம் அப்பாஸ் அறிமுகமானார்.இவருக்கு முதல் படத்திலேயே அதிக பெண் ரசிகர்கள் உருவானார்கள். விஐபி, பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.


ஆம், ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்பட்ட அப்பாஸ், போதிய வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காக உள்ளார்.

கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பச்சகல்லம் என்ற படத்தில் நடித்திருந்தார்.இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.


தனது கடந்த காலத்தைப் பற்றி பேசும்போது அவர் மிகவும் மனமுடைந்து ஒருமுறை தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது என கூறி உள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று, சான்றிதழ் படிப்பு படித்தேன் என்று அப்பாஸ் கூறினார்.

நடிகரின் மனைவி எரும் அலி ஒரு பிரபலமான வடிவமைப்பாளர், குறிப்பாக அவரது திருமண ஆடைகளுக்கு பெயர் பெற்றவர்.

முன்னணி நடிகராக வணிகரீதியாக ஏமாற்றமடைந்த தமிழ்ப் படங்களுக்குப் பிறகு, அப்பாஸ் 2000களின் முற்பகுதியில் இரண்டாவது ஹீரோவாக பல படங்களில் நடித்து உள்ளார். ஆனால் தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் நிம்மதியாக ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து வருகிறார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!