புற்றுநோயை எதிர்த்து போராடும் தாய்க்கு ஆதரவாக மகன் செய்த நெகிழ்ச்சி செயல்!

புற்றுநோய் வந்தவர்களுக்கு அளிக்கப்படும் ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகளால் அவர்கள் முடி கொட்டும் என்பதால் அவர்கள் தங்கள் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வார்கள்.

உணர்வு ரீதியாக இந்த வலியை கடப்பது சற்று கடினமானது என்பதால் அந்த நேரத்தில் மற்றவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம்.

இதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், முடி திருத்தும் தொழிலாளி ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயின் தலைமுடியை மொட்டையடிக்கிறார்.

பின்னர் தாய்க்கு ஆதரவாக அந்த தொழிலாளியும் தனக்கு தானே மொட்டை அடித்து கொள்கிறார். இதை கவனித்த அந்த தொழிலாளியுடன் வேலை செய்யும் சக தொழிலாளர்களும் தங்கள் தலைமுடியை சேவிங் செய்கிறார்கள்.

இதை கண்ட புற்றுநோயாளி கண்ணீர் விட்டு அழுவது போன்று காட்சிகள் உள்ளன. வைரலாகி வரும் இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து இதுவரை 47.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 3.8 மில்லியன் விருப்பங்களையும் பெற்றுள்ளது.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது உருக்கமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!