காணாமல் போன சிறுவன்… இறந்தே விட்டதாக நினைத்த பெற்றோர் – உயிர் பிழைத்த அதிசயம்!

அமெரிக்காவில் வனப்பகுதியில் காணாமல் போன சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு நாள்கள் பனியை சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளான்.

நன்டே நெய்மி என்ற 8 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன், அமெரிக்காவில் மிச்சிகன் பகுதியில் சுற்றுலா சென்ற போது காணாமல் போயுள்ளான்.

இதைத் தொடர்ந்து, போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், பார்குபைன் மலைப்பகுதி அருகே சிறுவனை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவன், தான் நீர்ச்சத்துடன் இருப்பதற்காக இரண்டு நாtகளும் பனியை சாப்பிட்டதாகவும், பெரிய மரக்கட்டையின் கீழ்ப்பகுதியில் பதுங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளான்.

30 மற்றும் 40 டிகிரி பனியில் காட்டில் 8 வயது சிறுவன் எப்படி உயிர் பிழைத்தான் என்று பலர் கேட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!