போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக தமிழகம் தாண்டி இந்தியாவையே அதிரவைத்த சம்பவம் ஒன்று!


சென்னை மலையம்பாக்கத்தில் ரௌடி பினு பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி முனையில் 75 ரௌடிகளை கைது செய்யப்பட்டனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்துக்கு பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் சிவகுமார் தான் காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது சென்னையில் நடைபெற்ற ரவுடிகள் வேட்டைதான். தமிழகம் தாண்டி இந்தியாவையே அதிரவைத்த இச்சம்பவத்தை அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

120 ரௌடிகளை ஒரே நேரத்தில் சுற்றி வளைத்து அதில் 75 ரௌடிகளை கைது செய்தது, தமிழக போலீஸ் வரலாற்றில் இதுவே முதல்முறை.


காவல்துறையில் இப்படிப்பட்ட சாதனை நிகழ முதற்காரணமாய் இருந்தவர் பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் சிவகுமார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ரௌடிகள் கைது செய்யப்பட்ட அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரது குழுவினரைப் பார்த்ததும் ஒருவர் தனது வண்டியை நிறுத்தாமல் தப்பி ஓடினார்.

இதையடுத்து சினிமா பாணியில் துரத்திச் சென்ற ஆய்வாளர் சிவகுமார் அவரை பிடித்தார். பிடிபட்ட அவரிடம் சோதனை செய்த போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

இதையடுத்து காவல்நிலையம் அழைத்து வந்து அவரிடம் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் அவன் பெயர் பல்லு மதன் என்பதும் ரவுடி பினுவின் பிறந்தநாளை கொண்டாட மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் கிராமத்திற்கு செல்வதும் தெரியவந்தது.


அதனை தொடர்ந்து விழா நடைபெறும் வேலு லாரி ஷெட்டிற்கு சென்று அங்கு நடைபெறுவதை உறுதி செய்த ஆய்வாளர் சிவகுமார் தனது மேல்அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்றது தான் மிகப்பெரிய ரௌடிவேட்டை.

இவ்வளவு பெரிய சாதனை செய்த பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அவரது குழுவினரின் பெயர் மற்றும் தகவல் எந்த ஊடகத்திலும் வரவில்லை. இவ்வளவு ஏன் எந்த மேல் அதிகாரியும் சிவகுமார் டீமை அழைத்து பாராட்டவில்லை என்று கூறப்படுகிறது.

சிவகுமாரின் வீடு திருவான்மியூரில் இருந்தாலும் விடுதியில் தங்கி பணியாற்றி மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இல்லம் சென்று வருபவர் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல குற்றஒழிப்பு நடவடிக்கையில் மிகவும் திறமையாக செயல்படும் அதிகாரி என்ற நல்ல பெயரையும் அவர் எடுத்துள்ளார்.

ஆய்வாளர் சிவகுமாரின் இந்த சாதனையை அவரது மேல் அதிகாரிகள் பாராட்டாவிட்டாலும் பள்ளிக்கரணை மக்கள் அவரை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ரௌடிகள் ஆப்பரேஷனின் ரியல் ஹீரோ சிவகுமார்தான் என்கின்றனர் பள்ளிக்கரணை மக்கள். – Source : newstig.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!