கூகுள் மேப்பை பார்த்து காருடன் கடலுக்குள் சென்ற பெண் – வைரலாகும் வீடியோ!

குடிபோதையில் கூகுள் மேப்ப்பை பார்த்து காரை ஓட்டி கடலுக்குள் சென்ற பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலகின் ஒரு மூலையில் உள்ள நபர் எந்த நேரத்திலும் மற்றொரு மூலையில் உள்ள நபருடன் இணைய முடியும்.

தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் வேலை செய்யாது. சில சமயங்களில் நம் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். இல்லையேல் பெரிய பேரழிவு ஏற்படுவது உறுதி.அதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம்.

கூகுள் மேப்ஸ் அடிப்படையில் பயணம் செய்யும் சிலர் சம்பந்தம் இஈலாத இடங்களுக்கு சென்று விடுவது உண்டு. கூகுள் மேப்ஸ் மூலம் குடிபோதையில் ஒரு பெண் காரை ஓட்டி கடலுக்குள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காரில் பயணித்த அவர், கூகுள் மேப்ஸ் மூலம் வாகனத்தை ஓட்டி வந்தார். ஆனால் அவர் நம்பிய கூகுள் மேப் அவரை கடலுக்கு அழைத்துச் சென்றது.

கடலில் தவறி விழுந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் காருடன் மீட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக, கார் கடலில் கவிழ்வதற்குள் காரில் இருந்த சுற்றுலா பயணிகள் இருவரும் பாதுகாப்பாக கார் கண்ணாடி வழியாக இருந்து வெளியே மீட்கபட்டனர். இன்ஸ்டாகிராம் பயனர் கிறிஸ்டி ஹட்சின்சன் இத வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

சம்பவம் நடந்தபோது அவர் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறி உள்ளார். கூகுள் மேப் எப்போதும் சரியான வழியைக் காட்டாது, சில சமயங்களில் அது உங்களைத் தவறாக வழிநடத்தும், எனவே தெரியாத பகுதிகளுக்குப் பயணம் செய்யும் போது ஜிபிஎஸ்ஸை விட உள்ளூர்வாசிகளிடம் சரிபார்ப்பது நல்லது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!