27 நாட்கள்… 64 கிமீ தூரம்… வளர்த்தவரைத் தேடிச் சென்ற நாய்!

அயர்லாந்தில் நாயின் நன்றியுணர்வு செயல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அயர்லாந்தில் நாட்டில் நாய் ஒன்று 64 கிலோ மீட்டர் தூரத்தை 27 நாட்களில் கடந்து தனது பழைய ஓனரின் பகுதிக்கு சென்றிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. டோபர்மெர் என்ற நகரைச் சேர்ந்த நிகேல் என்ற புகைப்படக் கலைஞர் நாய் ஒன்றை கூப்பர் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்.

அவரது வீட்டில் ஏற்கனவே மோலி என்ற நாய் இருந்த நிலையில், இரண்டு நாய்களும் மகிழ்ச்சியாக இருந்தன. ஏப்ரல் 1 அன்று இரண்டு நாய்களையும் காரில் வெளியில் அழைத்து சென்றிருக்கிறார். கார் கதவைத் திறந்ததும் கூப்பர் வேகமாக ஓடிய நிலையில் திரும்பவரவில்லை. எங்கு தேடியும் கூப்பரை பிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து தனது நாய் கூப்பரை காணவில்லை என அப்பகுதியில் நிகேல் போஸ்டர் ஒட்டியிருக்கிறார். ஆனால் கூப்பர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த 27 நாட்களுக்கு பிறகு கூப்பர் டோபர்மோர் என்ற பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனை கேட்ட நிகேல் அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஏனெனில் கூப்பரை வளர்த்த இதற்கு முன் ஓனரின் வீடு அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது.

காடு, மலைகள், கரடு முரடான சாலைகள், டிராஃபிக் ஆகியவற்றைக் கடந்து 64 கிலோ மீட்டரை 27 நாட்களில் கடந்து வந்திருக்கிறது. கூப்பரின் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என இணையவாசிகள் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்<.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!