அசத்தலான ரியாக்‌ஷன் கொடுத்து பெண்களை கவர்ந்த ரோஷன் யார் தெரியுமா..?


கண் சிமிட்டல், புருவ நெரிப்பு மூலம் ரசிகர்கள் மனதைக் கண கச்சிதமாய் கவர்ந்திழுத்தவர் பிரியா வாரியர். சமீபத்தில் சமூக வலைதளத்தில் புயலாக மாறியது ‘ஒரு அடார் லவ்’.

பாடல், டீசர் என வெளியான சில நாட்களில் பல மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதில் பிரியாவின் காதலனாக நடித்திருப்பவர் ரோஷன் அப்துல் ரஹூஃப்.

ஆண்கள் அனைவரும் பிரியா வாரியரை சுற்றிக் கொண்டிருக்க, பெண்கள் ரோஷனின் அசத்தலான ரியாக்‌ஷனுக்கு ஹார்ட்டின் ரியாக்‌ஷன் போட்டு வருகிறார்கள். அவரைப் பற்றிப் பார்க்கலாம்.

‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடித்திருக்கும் ரோஷன் அப்துல் ரஹூஃப்பும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாவதோடு அதிக ஃபாலோயர்களை பெற்று வருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் குவிகிறார்களாம்.


கேரளா, திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அவருக்கு வயது ரோஷனுக்கு வயது 20. இவர் தனது இளங்கலை பட்டப் படிப்பை ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறாராம். அதிர்ஷ்டவசமாக தற்போதைக்கு இவர் சிங்கிள் தான்.

இவரது குடும்பம் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு வந்திருக்கிறதாம். அப்பா அப்துல் ரஹூஃப் பிஸினஸ் செய்கிறாராம். இவருக்கு ராயிஸ் அப்துல் ரஹூஃப், ரஷித் அப்துல் ரஹூஃப் என இரு சகோதரர்களும் இருக்கிறார்கள்.


பிரியா வாரியரைப் போலவே ரோஷனுக்கும் ஒமர் லுலு இயக்கியிருக்கும் ‘ஒரு அடார் லவ்’ படம் தான் அறிமுகப் படம். முதல் படத்திலேயே ரசிகைகளைக் கவர்ந்திருப்பதால் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்க இவரைத் தேடி வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதாம்.

‘ஒரு அடார் லவ்’ படத்த்தின் இந்தப் பாடல் வெளியானது முதலே சைலண்டாக செம பாப்புலராகி இருக்கிறார் ரோஷன். இவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை எகிறி வருகிறது. இப்போதே 4 லட்சம் ஃபாலோயர்களை கடந்திருக்கிறார்.-Source: tamil.filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!