பெண்கள் உடலை மூடி வைப்பது நல்லது… சல்மான் கான் கருத்தால் சர்ச்சை!

இந்தித் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான்கானுக்கு 57 வயது ஆகிறது.

இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 8 க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் அவருக்கு காதல் இருந்தது. ஆனால் எல்லாம் திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே முறிந்துவிட்டது.

நடிகைகள் சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யாராய், சினேகா உள்ளல், சோமி அலி, கத்ரினா கைப். இத்தாலிய மாடல் நடிகை லூலியா, ஜெர்மன் மாடல் நடிகை கிளாடியா சிஸ்லா, மற்றும் ஜார்ன்கான் ஆகியோரை காதலித்ததாக கூறப்பட்டது. இந்த நடிகைகள் பல்வேறு காரணங்களால் சல்மான்கானை விட்டுப்பிரிந்தனர்.

தற்போது பூஜா ஹெக்டேவும் சல்மான்கானும் காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. இருவரும் கிசிகா பாய் கிசிகி ஜான் என்ற இந்திப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இந்திப்பட உலகில் பேசி வருகின்றனர்.

பெண்கள் படப்பிடிப்பு தலங்களில் மிகவும் இறக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் என்று நடிகை பாலிக் திவாரியிடம் சல்மான் கூறியது தற்போது பேசுபொருளாகி உள்ளது.இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டையை அணியாமல் திரைப்படங்களில் நடிக்கும் சல்மான் கானின் இந்த கருத்து இரட்டை நிலைப்பாடு தானே என்ற கேள்விக்கு டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான் கூறியதாவது :- “இரட்டை நிலை இல்லை.

கண்ணியமான படம் உருவாகும் போது அனைவரும் குடும்பத்துடன் பார்க்கிறார்கள். பெண் உடல் விலைமதிப்பற்றது. அதை மூடி வைப்பது நல்லது, நான் நன்றாக உணர்கிறேன் என கூறினார்.

இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா என்று கேட்டதற்கு, பிரச்சனை பெண்களிடம் இல்லை, ஆண்களிடம் உள்ளது. பெண்கள், உங்கள் சகோதரி, உங்கள் மனைவி, உங்கள் தாயை ஆண்கள் பார்க்கும் விதம். எனக்கு அது பிடிக்கவில்லை” என்று சல்மான் கான் கூறினார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!