ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறிய இரட்டை சகோதரிகள்!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் அவ்வப்போது பல்வேறு காதல் கதைகளை நாம் கேட்பது உண்டு. இதில் பல வேடிக்கையாக இருந்தாலும் அதில் காதல் ஆழமாக இருக்கும்.

தற்போது இதற்கெல்லாம் மேலாக இங்கிலாந்தில் சகோதரிகள் இருவர் காதலித்து வருவது வியக்க வைத்துள்ளது. பெரும்பாலும் இரட்டை சகோதரர்கள் அல்லது சகோதரிகளாக இருப்பவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், உணவு பழக்க வழக்கங்கள், நோய் பாதிப்பு போன்றவை ஒரே மாதிரியாகவே இருக்கும்.

அந்த வகையில் இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் லிண்ட்சே, லூயிஸ் ஸ்காட் ஆகியோர் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றனர். சகோதரிகள் தாண்டி மிகவும் நெருங்கிய தோழிகளாகவும் காணப்பட்டனர்.

இவர்கள் குறித்து இங்கிலாந்தின் ‘டெய்லி ஸ்டார்’ வெளியிட்ட செய்தியில், 23 வயதாகும் இரட்டை சகோதரிகள் சிறுவயதில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள், தற்போது ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ முடியாத நிலைக்கு தங்களது உறவை வளர்த்துக் கொண்டனர்.

இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். ஒரே மாதிரியான உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சகோதரிகள் இருவரும் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறிவிட்டனர். இதனை அறிந்த இருவரும் பிரிந்துசெல்ல மனமில்லாத நிலையில், ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர்.

இதனால் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், எப்போதும் ஒன்றாகவே இருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 24 மணி நேரம் கூட தங்களால் பிரிந்து இருக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

விநோதமான இந்த இரட்டை சகோதரிகள் காதல் கதைதான் தற்போது இணையத்தில் வைரல் செய்தியாக உள்ளது.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!