போலீஸ்க்கு சட்டம் பொருந்தாதா? வைரலான வீடியோ.. என்ன ஆச்சு தெரியுமா?

போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற செய்யும் காவல் துறையினரே, அவற்றை மீறலாமா? சிசிடிவி கேமரா மற்றும் ஆன்லைன் சல்லான் முறை போன்ற வசதிகளால், விதிமீறல் சம்பவங்கள் எளிதில் வெளிச்சத்திற்கு வந்துவிடுகின்றன.

பல சம்பவங்களில் போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்களில் பொது மக்கள் மட்டுமின்றி போலீசாரும் சமயங்களில் சிக்கி இருக்கின்றனர். அந்த வரிசையில், ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் அரங்கேறி இருக்கிறது.

சம்பவம் பற்றிய வீடியோ டுவிட்டர் தளத்தில் மஞ்சுள் என்பவர் பதிவிட்டுள்ளார். வீடியோவில், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் பைக்கில் இரண்டு போலீசார் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் போலீசார் ஹெல்மட் அணியாமல் செல்கின்றனர். காவல் துறை சீருடையில் பயணம் செய்வதோடு, விதிமீறலில் ஈடுபட்ட போலீசாரிடம், மற்றொரு வாகனத்தில் வந்த பெண் ஒருவர் சட்டம் உங்களுக்கு பொருந்தாதா என்று கேள்வி எழுப்புகிறார்.

இதனை பெண் ஓட்டும் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த நபர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை பார்த்த போலீசார், வீடியோ பதிவாவதை தெரிந்து கொண்டு பெண்ணிடம் எதுவும் பேசாமல், வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றனர்.

போலீசாரை துரத்தி சென்ற பெண் அவர்களை சிக்னல் ஒன்றில் வைத்து பிடித்தார். எனினும், போலீசார் அந்த பெண்ணிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரல் ஆனது. இதனை பார்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய போலீசாருக்கு ரூ. 1000 அபராதம் விதித்தனர்.

போலீசார் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைகவசம் அணிவது கட்டாயம் ஆகும். தலைகவம் அணிவதால் விபத்தின் போது வாகனம் ஒட்டுவோரின் உயிரை காக்கும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!