நாகார்ஜுனாவின் மகன் தவறாக நடந்து கொண்டாரா..? வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை!

தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா. தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

தற்போது கிக், ரேஸ் குர்ரம், கிக்-2, துருவா, சைரா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள ஏஜென்ட் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆடியபோது அவரிடம் அகில் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவரை முதிர்ச்சியற்றவர் என்று ஊர்வசி ரவுத்தேலா சாடியதாகவும் வலைத்தளத்தில் விமர்சகர் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த நபர் மீது அவதூறு வழக்கு தொடர தனது வழக்கறிஞர் மூலம் ஊர்வசி ரவுத்தேலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். “நீங்கள் சொன்னதுபோல் படப்பிடிப்பில் எந்த சம்பவமும் நடக்கவில்லை. தவறான தகவல் வெளியிட்ட உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!