டிக்டாக்கில் ட்ரெண்டிங்கில் வர ஆசைப்பட்டு உயிரை விட்ட சிறுவன்.. கதறித் துடித்த பெற்றோர்!

நவீனமயமாகிவிட்ட இன்றைய காலத்தில் எப்படியாவது சமூக வலைதளம், யூடியூப்பில் டிரெண்டாக வேண்டும் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக பலரும் பல விதமான வினோத செயல்களில் ஈடுபட்டு கவனத்தை பெற விரும்புகின்றனர். இந்த வினோத செயல்களை ‘சேலஞ்ச்’ என்ற தலைப்பிட்டு ஒருவர் செய்வதை பார்த்து போட்டிக்கு நாமும் செய்வோம் என்ற பழக்கமும் இந்த டிரென்டிங் உலகில் உள்ளது.

ஆனால் அப்படி ஒரு சேலெஞ்சில் டிரென்டாக ஆசைப்பட்டு 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒஹாயோ மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் ஜஸ்டின் ஸ்டீவென்ஸ்-க்கு டிக்டாக் சமூக வலைதளத்தில் டிரென்டாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதற்காக தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட்டு வந்துள்ளார். ஆனால் எதுவும் பெரியளவில் அவருக்கு டிரெண்டாக வில்லை.

இந்த நிலையில், சளிக்கு பயன்படுத்தப்படும் பெனட்ரில் மருந்துகளை அதிக அளவிலான டோஸ் சாப்பிட்டு ஒருவிதமான மயக்க நிலையை யார் அடைகிறார்கள் என்ற சவால் டிக்டாக்கில் டிரென்டாகியது.

இந்த சவாலில் பங்கேற்க விரும்பிய அந்த சிறுவன், சுமார் 12 இல் இருந்து 14 பெனட்ரில் மாத்திரைகளை விழுங்கியுள்ளான்.

இதை அவனது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் சிறுவனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு அவனுக்கு சுமார் ஒருவார காலம் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை தரப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 13 வயது சிறுவன் ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோன்ற விபரீதங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!