பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் இன்று காலமானார்.

அவருக்கு வயது 93. வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாத்திமா இஸ்மாயில் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு செம்பை முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

இவர் செம்ப பாணபரத்தில் மறைந்த இஸ்மாயில் என்பவரின் மனைவி.

இவருடைய திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்துவிட்டு நடிகர் மம்மூட்டிக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!