காதலியின் உல்லாச வாழ்க்கை… கொள்ளையனாக மாறிய என்ஜினீயர்!

காதல் பொல்லாதது… இளம் வயதில் காதல் என்ற கடலில் விழுந்த பலர் வாழ்க்கையில் கரையேற முடியாமல் மூழ்கி போயிருக் கிறார்கள். அந்த வகையில் காதலியுடன் உல்லாசமாக ஊர் சுற்றவும், காதலி கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதற்கும் பாதை மாறிய பலரை பார்த்திருப் போம்.

சிறிய அளவில் அவ்வப்போது கை செலவுக்கு திருடி கைதாகி சிறை சென்ற காதலன்கள் பலர் உண்டு. அந்த வகையில் காதலுக் காக… காதலி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற் காக மிகப்பெரிய கொள்ளை யனாக மாறி இருக்கிறார் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து என்ஜினீயரான ஒருவர்.

திருவள்ளூர் மாவட் டத்தை சேர்ந்தவர் ஹேமந்த் குமார் ரகு. படிப்பில் கெட்டிக்காரரான ரகு நுழைவு தேர்வு எழுதி சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படித்து என்ஜினீய ரானார். படித்த கையோடு ஹேமந்த் குமாருக்கு வேலை யும் கிடைத்தது. துபாயில் பெரிய நிறுவனம் ஒன்றில் லட்சக்கணக்கான சம்பளத் துடன் வேலைக்கும் சேர்ந் தார்.

இதையடுத்து வருமானத் தின் ஒரு பகுதியை சேமித்துக் கொண்டே ஹேமந்த் குமார் வேலையில் மட்டுமே கவ னம் செலுத்தினார். இத னால் பணிபுரிந்த இடத்தில் நல்ல பெயரும் கிடைத்தது.

நல்ல வேலைக்காரன் என் கிற பெயரையும் ஹேமந்த் குமார் எடுத்தார். இப்படி தான் செய்த வேலையை மட்டுமே காதலித்துக் கொண்டிருந்த ஹேமந்த்குமார் பீகாரில் உள்ள முசாபர்பூர் நகரில் நடன விடுதிக்கு ஒருநாள் சென்றிருந்தார்.

அங்கு நடன அழகி ஒருவர் ஹேமந்த் குமாரின் கண்களில் பட்டார். முதல் பார்வையிலேயே காதல் தீ பற்றிக் கொண்ட நிலையில் இருவரது இதய மும் இடம் மாறியது. இதை யடுத்து துபாயில் இருந்து அவ்வப்போது பீகாருக்கு வந்து காதலியை பார்த்து விட்டு செல்வதை வழக்க மாக வைத்திருந்தார்.

நடன அழகியின் அழகில் மயங்கி கிடந்த ஹேமந்த் குமாரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. பீகாரில் இருக்கும் காதலி யின் நினைவு அவரை வாட்டி எடுத்தது.

இதனால் கைநிறைய சம்பளத்தை வாங்கி கொடுத்த துபாய் வேலையை உதறிவிட்டு பீகாருக்கு திரும்பினார். இதன்பின்னர் கையில் இருந்த பணத்தை காதலிக் காக செலவழிக்க தொடங் கினார்.

காதலி எதைக் கேட்டாலும் முடியாது என்று கூறாமல் வாங்கி கொடுத்ததால் ஹேமந்த்குமா ரின் ‘மணி பர்ஸ்’ கொஞ்சம் கொஞ்சமாக காலியானது. இப்படி சிறுக சிறுக சேமித்த பணம் அனைத் தையும் ஹேமந்த் இழந்தார். நடன அழகியான காதலி சொகுசாக வாழ்பவர். இதனால் அவரது செலவி னங்களும் எல்லை மீறியே இருந்துள்ளது.

இதனால் தனது 15 ஆண்டு கால சேமிப்பு பணம் மொத்தத்தையும் காதலிக்காகவே வாரி இறைத்த ஹேமந்த் ஒரு கட் டத்தில் கையில் பணம் இல்லாமல் தவியாய் தவித் தார்.

ஆனாலும் காதலி விட வில்லை. நீ என்ன செய் வாயோ? எனக்கு தெரியாது. எப்போதும் போல செல வுக்கு பணம் வேண்டும் என்று நச்சரிக்க தொடங்கி னார். இதனால் என்ஜினீய ராக இருந்த ஹேமந்த் கொள்ளையனாக அவதா ரம் எடுத்தார். பீகாரில் முசார்பூர் பகுதி யில் பெண்களிடம் செயின் பறிப்பது, கடைகளில் கொள்ளையடிப்பது என தொழில்முறை குற்றவாளி போல மாறினார்.

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட தனது கூட்டாளிகள் 3 பேரையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். இப்படி கொள்ளையடிக் கும் பணத்தை வைத்து மீண் டும் காதலிக்கு எப்போதும் போல செலவு செய்ய தொடங்கினார். இந்த நிலையில் தான் முசார்பூர் பகுதியில் பெண் ஒருவரிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை திருடிய வழக்கில் ஹேமந்த்குமார் பிடிபட் டார்.

இந்த வழக்கில் கைவரிசை காட்டிவிட்டு மாதோபூர் என்ற இடத்தில் செங்கல் சூளை ஒன்றில் பதுங்கி இருந்த ஹேமந்தையும் அவரது கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் அதி ரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது ஹேமந்திடம் விசாரணை நடத்திய போலீ சார் அவரது கதையை கேட்டு ஆடிப்போய் விட் டார்கள்.

பீகாரில் மிதன்புரம் என்கிற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தபடியே ஹேமந்த் தனது காதலியுடன் உல்லாசமாக ஊர் சுற்றிக் கொண்டே கொள்ளை சம் பவங்களிலும் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்து உள்ளது. பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு காதலிக்காக கொள்ளையனாக மாறிய ஹேமந்தின் நிலையை பார்த்து அவரது சக நண்பர் கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

தற்போது 40 வயதாகும் ஹேமந்த் கிட்டத்தட்ட தனது இளம் வயது காலத்தை காதலில் விழுந்து தொலைத்து விட்டார். தற்போது சிறையில் அடைக் கப்பட்டு பரிதாபமாக கம்பியும் எண்ணிக் கொண் டிருக்கிறார். ஹேமந்த்குமாருக்கு கிடைத்திருப்பது போன்று பலருக்கும் காதலிகள் இருக் கலாம். அவர்கள் எல்லாம் ஒரு வகையில் பாவம்தான்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!