மாணவர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் 6 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை மையப்படுத்தி அந்த நாட்டின் உள்ளேயும், வெளியேயும் நடக்கும் பிரச்சினைகள் அவ்வப்போது பூதாகரமாக வெடிப்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவில் ஒரு பிரச்சினை பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது பள்ளி மாணவர்கள்-ஆசிரியைகள் இடையேயான உறவு தான் தற்போது அங்கு சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஆசிரியைகள் மீது தொடர்ந்து எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் தான். இந்த குற்றச்சாட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
அமெரிக்காவின் டான்வில்லியை சேர்ந்தவர் எலன் ஷெல் (வயது 38). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயது 2 மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.
இவர்கள் 2 மாணவர்களுடன் முறைதவறி உறவில் ஈடுபட்டுள்ளார். 2 மாணவர்களுக்குடன் 6 முறை பாலியல் உறவு வைத்துள்ளார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கேட்டு அதிர்ச்சி ஆகினார். இதுதொடர்பான புகாரில் எலன் ஷெல் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஆர்கன்சாஸ் ஆசிரியை ஹீதர் ஹேர் (32).
இவரும் பள்ளியில் மாணவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். அதேபோல் ஓக்லஹோமாவைச் சேர்ந்த ஆசிரியையான எமிலி ஹான்காக் (26) என்பவரும் ஒரு மாணவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதையடுத்து இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் லிங்கன் கவுண்டியில் உள்ள பள்ளியின் ஆசிரியையான டெலானி ஹான்காக், 15 வயது மாணவனுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இவர் பள்ளியின் வளாகத்திலேயெ மாணவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையான கிறிஸ்டன் காண்ட் (36) என்பவர் டீன் ஏஜ் மாணவியுடன் 5 முறை பாலியல் உறவில் இருந்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் ஜேம்ஸ் மேடிசன் பள்ளி ஆசிரியை அல்லி கெரட்மண்ட் (33) என்பவரும் மாணவியுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் எழுந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர பென்சில்வேனியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் (26). இவர் நார்தாம்ப்டன் பள்ளியில் பணியாற்றி வந்தார்.
இவர் தன்னிடம் பயிற்சி பெற்ற 17 வயது மாணவருடன் பள்ளி வளாகத்திலேயே உல்லாசமாக இருந்து வந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரியர்கள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!