நிலத்தில் கொட்டப்பட்ட எல்லையில்லா அன்பு.. 2,500 கிலோ அரிசியில் உருவான சோனுசூட் உருவம்!

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதி உதவி, பஸ் வசதி உள்பட பல உதவிகளை வழங்கி, பெரும் பங்காற்றியவர் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

இதனால், நாடு முழுவதும் பிரபலமடைந்தவர். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ தனியாக அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். திரைப்பட ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சோனு சூட் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை தெரிவிக்கும் விதமாக மத்திய பிரதேசம் மாநிலம் தேவாஸ்-ல், ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி சோனு சூட் உருவத்தை ரசிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வரைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர் உஷா இதனால் மிகவும் நெகிழ்ந்து போன சோனு சூட் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தேவையில்லாத வேலை என சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வரும் நிலையில், இந்த அரிசி முழுவதும் ஏழ்நிலையில் உள்ள பல குடும்பங்களுக்கு என்.ஜி.ஓ (NGO) மூலம் அனுப்பிவைக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!