விஷ மீன் சாப்பிட்ட பெண் சாவு – கணவர் கோமா நிலையில் சிகிச்சை!

ஜப்பான் கடலில் அதிகம் காணப்படும் பபர் என்ற மீன், கொடிய நச்சுத்தன்மை கொண்ட மீன் வகையாகும். இந்த நச்சு தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனினும் ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது. ஆனால் முறையாக பயிற்சி பெற்ற சமையல்காரர்களால் மட்டுமே அதன் விஷத்தன்மையை அகற்றிவிட்டு சமைக்க முடியும். சாதாரணமாக வீட்டில் அதனை சமைத்து சாப்பிட முடியாது.

இந்த நிலையில் மலேசியாவில் முதியவர் ஒருவர் கடந்த வாரம் பபர் மீனின் விஷத்தன்மை குறித்து அறியாமல் அதனை சமையலுக்கு வாங்கி சென்றார். அங்கு அவரது மனைவி அந்த மீனை வைத்து ஜப்பானிய உணவை சமைத்தார்.

பின்னர் இருவரும் அதை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதில் சிகிச்சை பலன் இன்றி மூதாட்டி உயிரிழந்தார். முதியவர் கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!