கலக்கலான வித்தியாசமான தோற்றத்தில் ரேவதி..!

ரேவதி தற்போது டூத் பாரி என்ற வெப் தொடரில் நடிக்கும் வித்தியாசமான தோற்றம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் 1983-ல் வெளியான மண்வாசனை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரேவதி. மணிரத்னம் இயக்கத்தில் ரேவதி நடித்த மவுன ராகம் அவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். விஜய்யின் தமிழன், அஜித்குமாரின் ரெட் படங்களில் குணசித்திர வேடங்களில் வந்தார்.

தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார்.

இந்த நிலையில் ரேவதி தற்போது டூத் பாரி என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் அவர் நடிக்கும் வித்தியாசமான தோற்றம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!