ரத்த தானம் செய்வதில் 80 வயதில் கின்னஸ் சாதனை!

80 வயதான மூதாட்டி ஒருவர் 203 யூனிட் ரத்தத்தை தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜோசபின் மைச்சலுக் என்ற 80 வயது மூதாட்டி, தனது இளம்வயது முதல் தற்போது வரை ரத்த தானம் செய்து வருகிறார். இதில் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

ஜோசபின் 1965 ஆம் ஆண்டு தனது 22 ஆவது வயதில் இரத்த தானம் செய்யத் தொடங்கினார். தற்போது வரை மொத்தம் 203 யுனிட்டுகளை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனைகளின் தரவுப்படி, இந்தியாவின் மதுராவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர், அதிக இரத்த தானம் செய்ததது சாதனையாக இருந்தது. அவர் தனது வாழ்நாளில் 117 யூனிட்களை வழங்கியுள்ளார். தற்போது அவரது சாதனையை ஜோசபின் முறியடித்துள்ளார்.

இதுக்குறித்து மூதாட்டி ஜோசபின் மைச்சலுக் கூறுகையில், பலர் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். பிரசவம், விபத்து, அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் பலருக்கு ரத்தம் மிகவும் அவசியமாகிறது. ஆனால் இன்று ரத்தம் தேவைப்படுகிற அனைவருக்கும் கிடைப்பதில்லை.

எனவே தேவைப்படுபவர்களுக்கு ரத்தம் கொடுக்க விரும்புகிறேன். இரத்தம் கொடுப்பதற்கு என்னுள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் O+ve ரத்தப்பிரிவை சேர்ந்தவர் என்றார்.O+ve என்பது பொதுவாக உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் எப்போதும் அதிக தேவை உள்ள இரத்த பிரிவாகும். ஏனெனில் இது மிகவும் பொதுவான வகையானதாக கருதப்படுகிறது.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!