அண்டார்டிகா – கிரீன்லாந்தில் உருகும் பனிமலை, உயரும் கடல்நீர் மட்டம்… அதிர்ச்சியில் மக்கள்..!


அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் உள்ள பனிமலைகள் மிகவும் வேகமாக உருகி வருகின்றன. அதுவும் கடந்த 25ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் 7.5 செ.மீ. உயர்ந்துள்ளதாக நேஷனல் அகாடமிக்ஸ் ஆஃப் சயின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்த செயற்கோள்கள் அளித்த தகவல்கள் இதனை உறுதி செய்தன.

கடல்நீர்மட்டம் 20-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை நிலையாக இருந்தது. அதன்பின் உலக வெப்பமயமாதலின் விளைவால் பனி உருகி நீர்மட்டம் அதிக அளவில் உயர்ந்துள்ளது.


கடல்நீர்மட்டம் உயருவதற்கான முக்கிய காரணங்கள் இயற்கை, மனிதர்களால் காலநிலையில் ஏற்பட்ட மாறுபாடு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கடல்நீர் மட்டத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது வெள்ளம் மற்றும் மண் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 2100-ம் ஆண்டிற்குள் கடற்கரையோரங்களில் உள்ள பகுதிகள் அழியும் அபாயம் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!