கர்ப்பிணிகள் புரொக்கோலியை கட்டாயம் ஏன் உண்ண வேண்டும் தெரியுமா..?


ஆசிய நாடுகளில் தற்போது புரொக்கோலி உட்கொள்வது பழக்கத்துக்கு வந்துள்ள போதிலும் ஆசிய நாடுகளை விட மேலைத்தேய நாடுகளில் புரொக்கோலியை உட்கொள்வது சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

இந்த புரொக்கோலியில் விட்டமின் ஏ, சீ, கே, பி6, கல்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்தத்து என்பன காணப்படுகின்றன. ஹீமொகுளோபின் அளவு அதிகரித்தல், எலும்புகள் வலுவடைதல், தோல் வியாதிகள் தடுக்கப்படுதல் மற்றும் பிறவிக்குறைபாடுகள் நீங்க்குதல் என்பன இந்த புரொக்கோலியை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளாகும்.

இந்த புரொக்கோலியை கர்ப்பிணிகள் உட்கொள்வதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பின்வருமாறு இனங்காணப்பட்டுள்ளன.

01. மலச்சிக்கல் நீங்குகின்றது
ஹோர்மோன் மாற்றங்கள் மற்றும் இரும்புச் சத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல காரணங்களால் பொதுவாக கர்ப்பிணிகள் அனைவருக்கும் மலச்சிக்கல் ஏற்படுவதுண்டு. ஆனால் புரொக்கோலியை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினை தடுக்கப்படுகின்றது.

02. இரத்தச் சோகை கட்டுப்படுத்தப்படும்
கர்ப்ப காலத்தில் அதிகளவு இரும்புச் சத்து தேவைப்படும். இதனால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புண்டு. தக்க தருணத்தில் புரொக்கோலியை உட்கொண்டால் இரத்தச் சோகை ஓடியே போய்விடும்.


03. சீனியின் அளவு கட்டுப்படுத்தப்படும்
தாயின் உடலில் உள்ள சீனியின் அளவு கர்ப்ப காலத்தில் கூடிக் குறையும். தேவையான அளவு புரொக்கோலி உடலுக்குச் சேர்வதால் சீனியின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

04. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது
புரொக்கோலியில் உள்ள பீட்டா கரோட்டீன் மற்றும் செலனியம் போன்றன நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தாயின் உடலை பாதுக்காக்கின்றன.

05. எலும்புகள் வலுவடையும்
கர்ப்ப காலத்தில் ஒஸ்ரியோபுரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த வியாதிகளால் தாய் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. புரொக்கோலியில் உள்ள கல்சியம், மக்னீசியம், பொஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து என்பன எலும்புகள் பாதிப்படைவதிலிருந்து பாதுகாக்கின்றது.

06. தோல் பாதுகாக்கப்படும்
புரொக்கோலியில் உள்ள விட்டமின் ஏ, ஈ, பி, மற்றும் கே என்பன தோலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன.

07. கண்பார்வை விருத்தியடையும்
புரொக்கோலியில் உள்ள பீட்டா கரோட்டீன் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாது கண் பார்வையையும் விருத்தி செய்கின்றது.

08. புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றது
புற்றுநோயை எதிர்த்து போராடக்கூடிய பைத்தோகெமிக்கல்கள் இந்த புரொக்கொலியில் அதிகளவில் காணப்படுகின்றது. அதனால் புரொக்கோலியை உட்கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது எனலாம்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!