உலகின் மிகப்பெரிய தாடி உடைய வாழும் மனிதர்!

கனடாவில் வசித்துவரும் சர்வான் சிங் என்பவர் தனது 17 ஆவது வயதில் இருந்து தாடியை வளர்த்து வருகிறார். 17 வயதுக்கு பிறகு அவர் ஒருமுறை கூடி தனது தாடியை வெட்டவில்லை. தற்போது அதுவே அவருக்கு சர்வதேச அளவில் புகழை கொடுத்துள்ளது.

கின்னஸ் உலக சாதனையின் படி, கனடிய சீக்கியரான சர்வான் சிங், முதலில் 2008 ஆம் ஆண்டில் தனது தாடியை அளந்தார். அப்போது அது 2.33 மீ (7 அடி 8 அங்குலம்) நீளமாக இருந்தது. அப்போது இப்படியொரு சாதனை படைப்பேன் என அவர் எதிர்பார்க்கவில்லை.

அதன்பின்னர் 2010 இல் இத்தாலியின் ரோமில் உள்ள லோ ஷோ டீ ரெக்கார்ட் ( Lo Show dei Record) என்ற சதை தொகுப்பில் இடம் பெற சர்வான், தனது தாடியை மீண்டும் அளந்தார். அப்போது அவரது தாடி 2.495 மீ (8 அடி 2.5 அங்குலம்) நீளமாக இருந்துள்ளது. அதுவும் இத்தாலிய சாதனை பட்டியலில் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் கடந்த அக்டோபர் 15, 2022 அன்று மறுஅளவீடு செய்தபோது, அது இன்னும் அதிகமாகி 8 அடி 3 இன்ச் நீள தாடியாகிவிட்டது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய தாடி உடைய வாழும் மனிதர் என்ற தனது முந்தைய சாதனையை உடைத்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இந்த நாட்களில் இது கொஞ்சம் சாம்பல் நிறமாக இருக்கிறது.

ஆனால் முன்னெப்போதையும் விட அற்புதமான தன்மையும் திகழ்வதாக சர்வான் கூறுகிறார். சர்வான் தனது தாடியை கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறார். இது ஒரு சீக்கியராக இருப்பதற்கான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது, என்று அவர் கூறினார்.

மேலும் சுருள்கள் அளவீட்டின் நீளத்தை மாற்றாமல் இருக்க, அளவிடும் முன் முடி இயற்கையாகவும் ஈரமாக்கி அளவீடுகள் எடுக்கப்பட்டு தற்போது கின்னஸ் சாதனை சான்றிதழ் சர்வான் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்ததுதான் கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ம் ஆண்டு சர்வன் சிங் முறியடித்தார். அப்போது அவரது தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!