நடிகர் கோவை குணா திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல சின்னத்திரை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். திரையுலகில் அடுத்தடுத்து கலைஞர்கள் எதிர்பாராத நிலையில், மரணித்து வருவதால் கடந்த சில மாதங்களாகவே திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

திரை நட்சத்திரங்கள், மூத்த கலைஞர்கள், இளம் நடிகர்கள் தொடங்கி திடீர் உயிரிழப்புகள் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவை நடிகர் மயில்சாமி, பிரபல தயாரிப்பாளர் என திடீர் மரணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அந்த வரிசையில் தற்போது பிரபல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் கோவை குணாவின் மரண செய்தியும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 54 வயதான கோவை குணா திரையுலகில் பெரிய அளவில் வந்திருக்க வேண்டியவர் என்று பலரும் தங்கள் அஞ்சல் குறிப்பில் தெரிவித்து வருகின்றனர். என்னை வளர்த்து விட்டதே அவரு தான் என்று மதுரை முத்து கதறியழுகிறார்.

சிவாஜி கணேசன், கவுண்டமணி உட்பட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் அட்டகாசமாக மிமிக்ரி செய்து ரசிகர்களிடையே மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் கோவை குணா. பிரபல நகைச்சுவை நடிகரான கோவை குணா, அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர்.

இவர் தனது மிமிக்கிரியால் பலரின் மனிதில் இடம்பிடித்த குணா அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னரும் ஆவார். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை குணாவின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் கோவை குணாவைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல் குறிப்பில் பதிவிட்டு வருகின்றனர்.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!